தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த பத்து வருடங்களாக படிப்படியாக முன்னேறி ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள இவர், கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அதன் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளால் கோபமடைந்து அவரை அநாகரிகமான வார்த்தைகளால் ஸ்ரீநாத் பாஷி திட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தொகுப்பாளினியும் சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனமும் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் படங்களில் நடித்து முடித்த பின்பே அவர் மீதான தடை நீக்கம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இவர் நடித்துள்ள சட்டம்பி திரைப்படத்தில் தற்போது வெளியிடப்படும் போஸ்டர்களில் இவரது படம் இல்லாமலேயே வெளியாகி வருகின்றன.. பட தயாரிப்பாளரின் இந்த செயலுக்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும் இன்னொரு பக்கம் ஸ்ரீநாத் பாஷிக்கு ஆதரவாக இதுகுறித்து கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.