'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 10 நபர்களில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு ஜாமின் பெற்று தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட நடிகை, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் தனது வழக்கின் விசாரணை பாரபட்சமாக இருப்பதாகவும் அங்கிருந்து முறையான நீதி கிடைக்காது என கருதுவதால் அதை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை வைத்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி திலீப் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அதனால் இந்த விசாரணை நியாயமானதாக இல்லை என்றும் அதற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நடிகை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த காரணத்தை தெரியப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நடிகை தரப்பில் கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம் இந்த தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வழக்கு விசாரணையை ஒரு பெண் நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நடிகை வைத்த கோரிக்கையின்படி தான் தற்போது பெண் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது