ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
கேரளாவில் புகழ்பெற்ற ராக் இசை கலைஞர் ஜான்.பி.வர்க்கீஸ். லண்டனில் இசை பயிற்சியில் 8 கிரேட் முடித்த முதல் மலையாளி. ஏராளமான ராக் இசை கச்சேரிகளை நடத்தி உள்ளார். ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். 2007ம் ஆண்டு புரோசன் என்ற இந்தி படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு இடி சங்கத்தி, என்ற தெலுங்கு படத்திற்கும், கார்த்திக் என்ற கன்னட படத்திற்கும் இசை அமைத்தார். மலையாளத்தில் கம்மட்டிபாடம், ஒலிப்பொரு, பென்கொடி, ஈடா படங்களுக்கு இசை அமைத்தார்.
52 வயதான ஜான் வர்க்கி திருச்சூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.