ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தெலுங்கு சினிமாவில் கடந்த நாற்பது வருடங்கலுக்கு மேலாக கதாநாயகனாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இதுவரை கதாநாயகனாகவே 106 படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இப்போதும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் ஆக்சன் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இதற்கு முன்னதாக பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான அகாண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது பிரபல இயக்குனர் கோபிசந்த் மாலினேனி டைரக்ஷனில் தனது 107-வது படத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். நேற்றோடு பாலகிருஷ்ணா திரையுலகில் நுழைந்து நாற்பத்தி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பாலகிருஷ்ணாவின் முதல் படம் 1974ல் டனமாகாலா வெளியானது. இதை இயக்குனர் கோபிசந்த் மாலினேனி மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் பாலகிருஷ்ணா.