ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 குறும்படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் 'ஒலவும் தீரவும்' குறும்படம், மலையாளத்தில் மிகவும் அதிக படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள எவர்கிரீன் கூட்டணியான மோகன்லாலும் இயக்குனர் பிரியதர்ஷனும் மரைக்கார் என்கிற பிரமாண்ட படத்திற்கு பிறகு இதில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் வில்லனாக ஹரிஷ் பெராடி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் துவங்கியுள்ளது. புலிமுருகன் படத்தில் நடித்தது போன்று எளிய கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்பது தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.




