பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் அவற்றை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
யானை தந்தங்களை வீட்டில் வைத்திருக்க அது எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்கம் அளித்து வனத்துறையிடம் அனுமதி சான்று வேண்டும். ஆனால் மோகன்லாலிடம் அதற்கான சான்று இல்லை . இதனால் அவர் மீது வனத்துறை பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நடந்த வந்த நிலையில் மோகன்லால் யானை தந்தம் வைத்துக் கொள்ள கேரள அரசு அனுமதித்துள்ளது, எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு மனுதாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் கேரள உயர்நீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக பெரும்பாவூர் நீதிமன்றமே முடிவெடுக்க கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது.
நேற்று இந்த மனு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வழக்கு தொடர்ந்து நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




