''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் இளம் நடிகை ஒருவரை சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை போலீசில் புகார் செய்ததை அடுத்து விஜய்பாபு மீது பலாத்கார வழக்கு தொரடப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான விஜய்பாபு போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது கேரளா திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்யக்கூடாது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறி கேரள உயர்நீதி மன்றத்தில் விஜய்பாபு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் 2 நாட்கள் கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விஜய்பாபு போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தனது கைது தடையை நீடிக்க வேண்டும் என்றும் விஜய்பாபு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் போலீசாரும் விஜய்பாபுவிடம் விசாரணை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். இரு மனுக்களையும் ஏற்ற நீதிமன்றம் விஜய்பாபுவை வருகிற 7ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதோடு விஜய்பாபுவும் வழக்கு தொடர்பான சாட்சிகளையோ, வழக்கு தொடுத்தவரையோ சந்திக்கவும் தடை விதித்தது.