ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாள திரையுலகை பொருத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தாலும் கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்களது வியாபார எல்லையும் வசூல் இலக்கும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக மலையாள திரையுலகில் ஒரு ஹிட் படம் 50 கோடி வசூலை தொடுவது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன என்கிற படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
ஒரு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக என்கவுன்டர் செய்து கொல்லப்படுகின்றனர். ஆனால் வழக்கறிஞரான பிரித்விராஜ் இது அரசியல் காரணங்களுக்காக போலியாக நடத்தப்பட்ட என்கவுன்டர் என வாதிட்டு உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வருவார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.