என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பாலிவுட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆமிர்கான் நடிப்பில் தங்கல் என்கிற படம் வெளியானது. மல்யுத்த வீரரான ஆமிர்கான் தனக்கு ஆண் வாரிசு இல்லாத நிலையில் தனது மகளை மல்யுத்த வீராங்கனையாக உருவாக்கி அவர் மூலம் வெற்றி காண்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கோச்சாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மராத்தி நடிகர் கிரிஷ் குல்கர்னி. இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் இவர் தற்போது முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிப்பதன் மூலமாக தென்னிந்திய திரையுலகில் அதிலும் அடியெடுத்து வைக்கிறார்.
பஹத் பாசில், அவரது ஆஸ்தான இயக்குனரான திலீஷ் போத்தன் உள்ளிட்ட நால்வர் இணைந்து தயாரிக்கும் தங்கம் என்கிற படத்தில் தான் கிரிஷ் குல்கர்னி நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக வினித் சீனிவாசன் நடிக்க முக்கிய வேடத்தில் பிஜுமேனன் நடிக்கிறார். இந்தப் படத்தை சஹீத் அராபத் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில்தான் நடைபெற உள்ளது.