பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கு சினிமாவை போன்று கன்னட சினிமாக்களும் உலக அளவிலான கவனத்தை பெற்று வருகிறது. அதற்கு கதவு திறந்து விட்டது கேஜிஎப். இதன் வரவேற்பும், வசூலும் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்த வரிசையில் அடுத்து வரும் படம் விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப் நடித்துள்ள இந்தப் படம் சர்வதேச தரத்திலான சூப்பர் ஹீரோ படம். ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள இந்த படத்தை ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரித்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளில் ஜூலை 28ம் தேதி வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமம் பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனை ஒன் டுவன்டி 8 மீடியா என்ற நிறுவனம் வாங்கி உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது: இப்படத்தின் கதை உலகளாவியது என்பதை நான் எப்போதும் நம்பி வருகிறேன். உலகம் முழுவதும் மக்களின் உணர்வுகள் ஒன்றாகவே இருக்கும் இப்படத்தின் இந்த ஒப்பந்தம் அதற்கு ஒரு சான்றாகும். இப்படத்தின் விற்பனையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன் மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்பேன். இப்படத்தின் விற்பனை இது ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சத்தை தாண்டியதோடு, மற்ற தென்னிந்திய மொழிகளுக்கு இணையாக உள்ளது. என்றார்.