புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
தெலுங்கில் கோபிசந்த் இயக்கத்தில் தனது 107வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், வரலட்சுமி நடிக்க, லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பாலகிருஷ்ணா இரண்டு வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்றில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்ஸ்டராக நடிப்பவர், இன்னொரு வேடத்தில் முழுக்க முழுக்க வெள்ளை உடையில் ஒரு சாமானியர் ஆக நடித்து வருகிறார். இந்த இரண்டு வேடங்களிலும் தெளிவான வேறுபாடு இருக்கும். சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் ரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய பல அம்சங்கள் இருப்பதாக இயக்குனர் கோபிசந்த் மாலினேனி தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த படம் சமூக கருத்து என்பதையும் தாண்டி முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.