2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் இருமுகம் கொண்டவர் விஜய்பாபு. சமீபத்தில் இவரது மூன்றாம் முகம் வெளிப்படும் விதமாக நடிகை ஒருவர் இவர் மீது காவல்நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை அளித்தார். இதனடிப்படையில் போலீசார் விஜய்பாபு மீது வழக்கு பதிந்துள்ளனர். தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்துள்ளார் என சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியதாக இன்னொரு வழக்கும் அவர் மீது பதியப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்பாபு, தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதற்காக துபாய்க்கு பறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் விஜய்பாபுவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களது அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி அனுப்பப்படுவது தான் இந்த புளூ கார்னர் நோட்டீஸ். இருந்தாலும் தற்போது கோடைக்காலம் என்பதால் நீதிமன்ற விடுமுறை காரணமாக விஜய்பாபுவுக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர் முன்ஜாமீன் பெற்ற பிறகே கேரளாவுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.