கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தமிழில் ராஜாராணி, நையாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகினார்.. தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நானி கதாநயகனாக நடிக்கும் இந்தப்படத்தை 'மெண்டல் மதிலோ' புகழ் விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஜூன்-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நஸ்ரியா, இயக்குனர் பற்றியும் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “இன்று என்னுடைய டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.. இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை போல இந்த பயணம் முழுவதும் ஒரு சிறந்த வழிகாட்டியை நான் பெற்றிருக்க முடியாது. ஒரு அற்புதமான மனிதராக இருந்து, சிறந்த நண்பராக மாறிய உங்களுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்வதை நான் விரும்பினேன். கடந்த ஒரு வருடமாக நீண்ட இந்த பயணத்தில். நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.. இனி அடுத்த முறை பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன் " என்று கூறியுள்ளார் நஸ்ரியா.