சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

‛பாரோஸ்; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற படத்தின் மூலம் முதன் முறையாக ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் உருவாகி வருகிறது. போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகாவலன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். திரிஷ்யம்,-2 மான்ஸ்டர் அலோன் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டே இடையில் பாரோஸ் படத்தின் படப்பிடிப்பை பல கட்டமாக இயக்கி வந்தார் மோகன்லால். இந்த நிலையில் தற்போது தான் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு பாரோஸ் படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் மோகன்லால். இதன் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.




