சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் |

நடிகர் மம்முட்டி நடித்த பீஷ்ம பர்வம் என்கிற படம் நாளை (மார்ச்-3) வெளியாக இருக்கிறது. மம்முட்டியை வைத்து பிக் பி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத், பதினைந்து வருடம் கழித்து மீண்டும் இந்தப்படத்தில் மம்முட்டியுடன் கைகோர்த்துள்ளார்
சினிமா தவிர புகைப்படக்கலையில் மம்முட்டி ரொம்பவே ஆர்வம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரியும். அந்தவகையில் பீஷ்ம பர்வம் படப்பிடிப்பின்போது அந்தப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகை சிருந்தா ஆசப் என்பவருக்கு புகைப்படம் எடுப்பது எப்படி என அதில் உள்ள நுணுக்கங்கள் குறிப்பு டிப்ஸ் வழங்கியுள்ளார் மம்முட்டி.
அப்படி தான் எடுத்த புகைப்படங்களை மம்முட்டியிடம் காட்டி அவரிடம் பாராட்டு பெற்றுள்ள சிருந்தா ஆசப், மம்முட்டி தான் எடுத்த புகைப்படங்களை செக் பண்ணும்போது எடுத்த போட்டோக்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பீஷ்ம பர்வம் ரிலீசாக இருக்கும் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.