ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனா தொற்றால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. அதனால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தது. இதை தொடர்நது அங்குள்ள தியேட்டர்கள் மூடப்பட்டது. 3வது அலையின் போது தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ( மார்ச் 1)முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. சினிமா அமைப்புகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன.