சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'ஹனுமான்'. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இந்த நிலையில் இங்கே எப்படி லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (எல்சியு) உருவானதோ அதேபோல தெலுங்கில் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்கிற கான்செப்ட்டில் பிரசாந்த் வர்மா பங்களிப்பில் உருவாக இருக்கும் படம் 'மகாகாளி'.
புராண பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அசுரகுரு சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் கன்னா.
சமீப வருடங்களாக சைப் அலிகான், சன்னி தியோல் போன்றவர்கள் தென்னிந்திய சினிமாவில் களம் இறங்கி வரும் நிலையில் தற்போது அக்ஷய் கண்ணாவும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் அக்ஷய் கன்னா நடிக்கும் சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.