புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ரப் நோட் புரொடக்ஷன் சார்பில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ' காட்ஸ் அண்ட் ஜோல்ஜர்ஸ்'. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது.
ஆரி அர்ஜுணன் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . தெலுங்கு நடிகர் ராஜ் தருண் இந்தப் படத்தின் மூலம் தனது தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் பரத், அம்மு அபிராமி மற்றும் கிஷோர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இயக்குநர் விஜய் மில்டன் கூறும்போது "நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் நன்றி. காரணம், இந்த படம் அனைவரிடமிருந்தும் மித மிஞ்சிய உடல் உழைப்பையும் நேர்மையையும் எதிர்பார்த்தது. ஆனால் நாங்கள் அதன் எல்லைகளை தாண்டியிருக்கிறோம். திரையில் பதிவான அந்த ஆற்றல் பார்வையாளர்களுடன் வலுவாக இணையும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.




