அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

இந்திய அளவிலேயே ஒரு படத்திற்கு ஐந்தாம் பாகம் உருவாகிறது என்றால் அது மலையாளத்தில் மம்முட்டி நடித்த சிபிஐ டைரி குறிப்பு படத்திற்குத்தான். இதுவரை இந்தப்படத்திற்கு நான்கு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இதன் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ஷோபனா விசிட் அடித்துள்ளார். மேலும் மம்முட்டியுடன் அங்கே எடுத்துக்கொண்ட செல்பியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஷோபனா “ஒரு ரசிகையாக எங்கள் கேப்டனை பார்க்க வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். எண்பது தொண்ணூறுகளில் மம்முட்டி-ஷோபனா இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.