படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
சமீபத்தில் பெய்த கன மழை ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 30 பேருக்கு மேல் உயிர்பலி ஆகியிருக்கிறார்கள்.
ஆந்திர மாநில அரசு மக்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. தெலுங்கு ஹீரோக்கள் வெள்ள நிவாரண உதவிகளை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாவும் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்கள் சக்திகேற்ப நிவாரண தொகையை அறிவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகள் வழங்கிய ஹீரோக்கள் ஆந்திர மக்களின் நிலை கண்டு மனம் நெகிழ்வதாகவும் இந்த நேரத்தில் அரசுக்கு அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.