மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கை வரலாறாகவும், 1983ல் இந்தியா உலக கோப்பையை வென்றதையும் மையப்படுத்தி இந்தியில் உருவாகியுள்ள படம் 83. இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரன்வீர் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள இந்தப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் ரிலீசாக வரும் டிச-24ல் ஹிந்தியில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகிறது. இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார்..
நடிகராக, இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் மாறி தனது பிரித்விராஜ் புரொடக்சன் சார்பில் மலையாளத்தில் படங்களை தயாரித்து வருகிறார் பிரித்விராஜ். இன்னொரு பக்கம் ஒரு விநியோகஸ்தராக பேட்ட, பிகில், மாஸ்டர் என மற்ற மொழிகளில் உருவாகும் பெரிய படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.