பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

பாலிவுட் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா கடந்த இரண்டு வருடங்களாக சராசரிக்கும் கீழான படங்களை இயக்கிய வந்தவர், தற்போது மீண்டும் சீரியஸாக டைரக்சனுக்கு திரும்பியுள்ளார் என்றே தெரிகிறது. அதன் அச்சாரமாகத்தான் பிரபல தெலுங்கு நாவலாசிரியரான எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலை துளசி தீர்த்தம் என்கிற பெயரில் படம் எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதேசமயம் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாவலின் இரண்டாம் பாகமான மீண்டும் துளசி என்கிற நாவலைத்தான் துளசி தீர்த்தமாக எடுக்கப்போகிறார் ராம்கோபால் வர்மா. அப்படியானால் முதல் பாகத்தை அவர் ஏன் படமாக எடுக்கவில்லை, அல்லது முதல் பாகம் ஏற்கனவே படமாக வெளியாகிவிட்டதா என்கிற குழப்பம் பல ரசிகர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
ஆனால் முதல் பாகமான துளசி தளம் நாவலை படித்த ரசிகர்களுக்கு ராம்கோபால் இதற்கு முன் என்ன காரியம் பண்ணி வைத்துள்ளார் என்பது நன்றாகவே தெரியும்.. கடந்த 2008ல் ராம்கோபால் இயக்கத்தில் சுதீப் நடிப்பில் பூங்க் என்கிற படம் இந்தியில் வெளியானது. தமிழில் கூட பொம்மாயி என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்தப்படத்தின் கதாசிரியர் மிலிந்த் கடாக்கர் என ஒரு பெயரை காட்டியபோது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்..
காரணம் இதுதான் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய துளசிதளம் முதல் பாகத்தின் கதை.. ஒரு பிரச்சனைக்கான தீர்வை மாந்த்ரீகம் மூலமாகவும் விஞ்ஞானம் மூலமாகவும் அணுகிய இந்தக்கதையில் விஞ்ஞானம் என்கிற ஒரு கிளையை மட்டும் வெட்டியெடுத்து விட்டு, மாந்த்ரீகத்தை மட்டும் வைத்து படமாக்கி விட்டார் ராம்கோபால் வர்மா. இந்த கதை திருட்டு தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கும், எண்டமூரி வீரேந்திரநாத்துக்கும் இடையே பல வருடம் பனிப்போர் நிகழ்ந்த வரலாறும் உண்டு.
அதனால் தான் பூங்க் படத்தின் இரண்டாம் பாகம் விஷயத்தில் தலையிடாமல் ராம்கோபால் வர்மா ஒதுங்கிக்கொண்டார். அந்த இரண்டாம் பாக கதையையும் முதல் பாகத்தை எழுதியாக சொல்லப்படும் மிலிந்த் கடாக்கர் தான் எழுதி அவரே அதை இயக்கியும் இருந்தார்.
இந்தநிலையில் தான் எண்டமூரி வீரேந்திரநாத்துக்கும் ராம்கோபால் வர்மாவுக்கும் தற்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டு அவரது நாவலின் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்க இருக்கிறார்கள்.. அந்தவகையில் இந்த நாவலின் முதல் பாகத்தில் நடித்த சுதீப் தான் இதிலும் கதாநயகனாக நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது..