2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் துரந்தர். உளவுத்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இந்த படம் 1300 கோடி வசூலித்த பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற மார்ச் 19ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் துரந்தர் 2 படத்தின் டீசர் நேற்று திரைக்கு வந்துள்ள பார்டர் 2 படத்துடன் வெளியாகும் என்று இயக்குனர் ஆதித்யா தர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் டீசர் வெளியிடப்படவில்லை. இதையடுத்து ஆதித்யா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛துரந்தர் 2 படத்தின் டீசர் பார்டர் 2 படத்துடன் வெளியாகவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார்.