2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி வெளியான ஹிந்தித் திரைப்படம் 'துரந்தர்'.
கடந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்று உலக அளவில் 1300 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 50வது நாளைக் கடந்துள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 1000 கோடியை நெருங்குவதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படங்களில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்திய படங்களில் தற்போது 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 'டங்கல்', இரண்டாம் இடத்தில் 'புஷ்பா 2', மூன்றாமிடத்தில் 'பாகுபலி 2' ஆகியவை உள்ளன.
தன்னைவிட முன்னிலையில் உள்ள மூன்று படங்களின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இந்தப் படம் 'டங்கல்' படத்திற்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட, வசூலிக்கப்பட்ட இரண்டாவது ஹிந்திப் படமாக உள்ளது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 'பாகுபலி 2, புஷ்பா 2' சாதனை படைத்தது போல 'துரந்தர் 2' படமும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகீறது.