பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா. என்.டி.ஆர் காலத்திலேயே ஹீரோவாக அறிமுகமாகி கடந்த ஆண்டுவரை குணசித்ர வேடங்களில் நடித்து வந்தவர். இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர்.
கமல்ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்திருந்தார். பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2019ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்து இருந்தார்.
86 வயதான கைகலா சத்யநாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் பூரண குணமடைய தெலுங்கு ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதனிடையே சத்யநாராயணா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.