தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குருப் என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் நவ-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலைவழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு.. சுகுமார குருப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக்கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சுகுமார குருப்பின் வாழ்க்கை தான் தற்போது படமாக மாறி இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.. இந்தநிலையில் இந்த நிஜ சம்பவத்தில் பாதிப்புக்கு ஆளான சாக்கோவின் குடும்பத்தினரை அழைத்து தற்போது படத்தை போட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த சாக்கோவின் மகன் ஜிதின், “படத்தை பார்த்த பின்னர் தான் எங்கள் மனதில் இருந்த பல சந்தேகங்களும் தவறான புரிதலும் அகன்றன. இயக்குனர் ஸ்ரீநாத் என் தந்தை பற்றி படமக்கப்போவதாக எங்களிடம் என்ன சொன்னாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளார்” என படம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்..
அதேசமயம் இந்தப்படம் தயாராகி வந்தபோது,. அந்த கிரிமினலான சுகுமார குருப்பின் மனைவி தனது கணவனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தப்படம் இருக்குமோ என தானும் தன் மகனும் சந்தேகப்படுவதாகவும், படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்டிவிட்டே ரிலீஸ் செய்யவேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்கள்.. ஆனால் இதுவரை அவர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்டவில்லை.
இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறும்போது, இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குருப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம். குறிப்பாக சுகுமார குருப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என கூறியுள்ளார்.