நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பைவ் ஸ்டார் என்கிற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கனிகா, சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகிறார்.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கனிகா இப்போதும் கூட மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் சுரேஷ்கோபியுடன் பாப்பன், மோகன்லாலுடன் ப்ரோ டாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பிரித்விராஜ் டைரக்சனில் உருவாகியுள்ள ப்ரோ டாடி படத்தில் மோகன்லாலுடன் கடைசி நாள் படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் கனிகா. “2010ல் முதன்முறையாக கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்தில், லாலேட்டனுடன்(மோகன்லால்) நடித்தேன்.. அப்போதிருந்து ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் படப்பிடிப்பில் அவருடன் புகைப்படம் எடுப்பதை வழக்கமாகவே வைத்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.