பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
படம் : வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : கமல், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : ஜெமினி பிலிம்ஸ்
அஜித் நடித்த அட்டகாசம் படத்தை இயக்கி கொண்டிருந்தபோது, கமல் நடிப்பில், ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில், முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., என்ற ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு, சரணின் கதவைத் தட்டியது. என்ன செய்வது என, சரண் தவித்தபோது, அஜித் கொடுத்த அனுமதியால், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தை இயக்கினார்.
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., தான், இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர். ரவுடி, சவால் காரணமாக, டாக்டருக்கு படித்தால் எப்படியிருக்கும்? என்ற கேள்விக்குள், மருத்துவ துறையில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டியிருந்தது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., படம்.
இப்படத்தின் தலைப்புக்கு, டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தது எல்லாம், தனிக்கதை. கமலின் அப்பா கதாபாத்திரத்திற்கு முதலில் அணுகப்பட்டவர், கே.பாலசந்தர்; அவர் மறுக்கவே, நாகேஷ் இடம் பெற்றார். பாப்பு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது, ஜோதிகா; பின், சினேகா உள்ளே வந்தார்.
ஜெமினி பிலிம்ஸ், முன்னாபாய் படத்தை, ஒரே நேரத்தில் தமிழில், கமல் நடிப்பில், வசூல்ராஜா; தெலுங்கில், சிரஞ்சீவி நடிப்பில், சங்கர் தாதா; கன்னடத்தில், உபேந்திரா நடிப்பில், உப்பி தாதா என, மூன்று படங்கள் தயாரித்தது. தமிழில் தான், காமெடி களைகட்டியது. அதற்கு காரணம், கிரேஸி மோகனின் வசனமும்; கமலில் டைமிங் காமெடியும் தான்.
கேரம் போர்டு, கட்டிப்பிடி வைத்தியம், கோமா நோயாளி, டென்ஷன் துப்புரவு தொழிலாளி, பிரகாஷ்ராஜின் சிரிப்பு வைத்தியம், நாகேஷ் சென்டிமென்ட், பிரபு மற்றும் கருணாஸ் காமெடி, கிரேஸி மோகனின் ஆள்மாறாட்டம் என, படத்தை நினைத்து சிலாகிக்க, நிறைய காட்சிகள் உண்டு.
பரத்வாஜ் இசையில், கலக்கப்போவது யாரு, சகலகலா டாக்டர், சீனா தானா... என, அனைத்து பாடல்களும் தாளம் போட செய்தன.
ஒவ்வொரு துறைக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., அவசியம்!