ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி |

மும்பை : அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நடிகை கங்கனா மீது, டிவி பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக, திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கணா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
இந்நிலையில் கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கனா சென்ற போது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
           
             
           
             
           
             
           
            