2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆதிக்கு ஜோடியாக, ஆகான்ஷா சிங் நடித்துள்ளார். மேலும் கிரிஷ் குருப், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி, முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது. 70 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், அனைத்து கதாபாத்திரங்கள் மற்றும் கதையின் ஆதார உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் படத்தின் டீஸரை பாராட்டியுள்ளது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியதோடு, பெரும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. மேலும் நடிகை ஆகான்ஷாவின் திறமையான நடிப்பையும் அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.