தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
ஏக்தா டைகர் மற்றும் டைகர் ஜிந்தகி ஆகிய படங்களைத் தொடர்ந்து டைகர் பட வரிசையில் மூன்றாவது படமாக உருவாகி வரும் டைகர் - 3 என்கிற படத்தில் நடித்து வருகிறார் சல்மான்கான். முதல் இரண்டு பாகங்களை போலவே இந்தப்படத்திலும் கரீனா கபூர் தான் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை மணிஷ் சர்மா இயக்குகிறார். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாமி இந்தப் படத்தில் பாகிஸ்தான் ஏஜென்டாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
லாக் டவுனுக்கு பிறகு சமீப நாட்களாக துருக்கியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் துருக்கி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்த நாயகன் சல்மான்கான், தனது புகழ்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடியும் அசத்தினார். சல்மான்கான் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது