ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ் என்ற சர்வைவல் ரியாலிட்டி ஷோவில் உலக அளவில் உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்று வருகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நடிகர் ரஜினிகாந்த் என பல ஹாலிவுட் திரை பிரபலங்களும் பியர் கிரில்ஸூடன் காட்டுப்பகுதியில் பயணித்து அந்த திரில்லிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடைபெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.