பெரிய படம், சிறிய படம் பட்ஜெட் தீர்மானிக்கக் கூடாது - சித்தார்த் | 'மல்லி' தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஜெய் எஸ் கே! | 'புஷ்பா 2' வியாபார பாணியை பின்பற்றும் 'கேம் சேஞ்சர்' | 24 மணி நேர சாதனையில் நம்பர் 1 இடத்தில் 'கிஸ்ஸிக்' | அக்ஷிதாவிற்கு திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள் | 42 வயதில் ராதிகாவால் கிடைத்த வாழ்க்கை - பாபூஸ் உருக்கம் | ரஹ்மான் எனக்கு அப்பா மாதிரி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் |
கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ஆலியா பட், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்து வரும் ராம்சேது படப்பிடிப்பின்போது, தனக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் தெரிந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் தற்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தினார்
அந்த வகையில் ராம்சேது படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் 45 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, படப்பிடிப்பில் நுழைவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனாலும் இத்தனை பேருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.