ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கொரோனாவின் அடுத்த அலை மிகவும் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். ஏற்கனவே ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக ஹிந்தி நடிகர்கள் கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பெட்னெகர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் அக்ஷய்குமார் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து கொரோனா தாக்கி வருவதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனைரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள்.