இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள் | ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா? | 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? |

கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் சமீபத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளான நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது : ‛‛இன்று(ஏப்., 4) காலை எனக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்'' என தெரிவித்துள்ளார் அக்ஷய்.