ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"ஸ்லம்டாக் மில்லினர் படம், ஆஸ்கர் விருது பெற்றதில் இருந்து, அந்த படத்தின் ஹீரோயின் ப்ரீடா பிண்டோவை, பாலிவுட் பக்கம் காண முடியவில்லை. ஹாலிவுட்டிலேயே தங்கி விட்டார். பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது, ஏதாவது அதிரடியாக செய்து, தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கும் வித்தையை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். கூடவே, அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபடுகிறார். பெண் குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், சர்வதேச அளவிலான அறக்கட்டளை அமைப்பின், விளம்பர தூதராக ப்ரீடா நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்ற ப்ரீடா, அங்கு வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தையை தத்து எடுத்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டார்.