ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடும் எதிர்ப்புக்களை மீறி ரிலீசாகி உள்ள பத்மாவத் படம் பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. குடியரசு தினத்திற்கு இதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனையை பத்மாவத் முறியடித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் குடியரசு தினத்தன்று வெளியான ராயீஸ், ஜெய் ஹோ படங்களின் வசூலை தோற்கடித்துள்ளது பத்மாவத் படத்தின் வசூல். குடியரசு தினத்தன்று இப்படம் ரூ.32 கோடியை வசூலித்துள்ளது. அதே சமயம் ராயீஸ் படம் ரூ.26.30 கோடியையும், ஜெய் ஹோ ரூ.25 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளன. பத்மாவத் படம் ரிலீசாவதற்கு முன்பு ரூ.5 கோடிக்கு வர்த்தகமானது.
ரிலீசான முதல் நாளான ஜனவரி 25 என்று ரூ.19 கோடிகளையும், 2வது நாளான குடியரசு தினத்தன்று மட்டும் ரூ.32 கோடி வசூலை குவித்துள்ளது. இதுவரை இப்படம் பாக்ஸ் ஆபீசில் மொத்தம் ரூ.56 கோடிகளை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பத்மாவத் படம் ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்டதாகும்.