ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் படம் ஜிகர்தண்டா. இப்படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதோடு சிறந்த எடிட்டிங்கிற்கும் தேசிய விருது கிடைத்தது.
இப்படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய பலத்த போட்டி இருந்தது. இப்போது இயக்குநர் நிஷிகாந்த் காமத், ஜிகர்தண்டா ஹிந்தி ரீ-மேக்கை இயக்க உள்ளார். நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறுகையில், ஜிகர்தண்டா ஹிந்தி ரீ-மேக்கை தயாரிக்கிறேன். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம். அருமையான படம். பர்கான் அக்தர், சஞ்சய் தத் முன்னணி ரோலில் நடிக்கின்றனர். பர்கான், சித்தார்த் ரோலிலும், சஞ்சய், பாபி ரோலிலும் நடிக்க உள்ளனர். ஹிந்தி ரீ-மேக்கில் சில மாற்றங்கள் செய்து ரிலீஸ் செய்ய உள்ளோம். அதேசமயம் கதையை சிதைக்காமல் எடுக்க உள்ளோம் என்றார்.