ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வந்த நடிகை ராய் லட்சுமி, பாலிவுட்டில் களமிறங்கி உள்ள படம் ஜூலி 2. ஏற்கனவே பாலிவுட்டில், 2004-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ஜூலி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது இந்த ஜூலி 2. தீபக் சிவதாஷினி இயக்கியுள்ளார். முதல்படத்திலேயே கவர்ச்சி பிரளயமாக உருவெடுத்திருக்கிறார் ராய் லட்சுமி. பிகினி, முத்தக்காட்சி என கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இப்படம் கடந்த அக்., 6-ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் கடைசிநேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி ஜூலி 2 படம் வருகிற நவ., 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.