சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி |
ஜேபி தத்தா இயக்கத்தில் உருவாகும் பல்தான் படத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பிக்க இருந்த நேரத்தில் திடீரென அபிஷேக் பச்சன், இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து புதிய நடிகர் விரைவில் அறிவிக்கப்படுவார் என சில தினங்களுக்கு முன்னர் இயக்குநர் ஜேபி தத்தா கூறியிருந்த நிலையில், இப்போது அபிஷேக் வேடத்தில் ஹர்ஷவர்தன் ராணே நடிக்க உள்ளார். இவர் கடந்தாண்டு சனேம் தெரி கசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
பல்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது லடாக்கில் துவங்கியுள்ளது. இப்படத்தில் அர்ஜூன் ராம்பால், புல்கிட் சாம்ராட், சுனில் ஷெட்டி, சோனு சூட், லுவ் சின்ஹா, சித்தாந்த் கபூர், ஜாக்கி ஷெரப் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்தை நித்தி தத்தா தயாரிக்கிறார்.