ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டைரக்டர் கிருஷ் இயக்கும் புதிய படம் மனிகர்னிகா க்யூன் ஆப் ஜான்சி. ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்று படமான மனிகர்ஜிகா க்யூன் ஆப் ஜான்சி படத்தை கமல் ஜெயின் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அடுல் குல்கர்னி நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது.
ஆனால் இப்போது இப்படத்தில் அடுல் நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் சோனு சூட் நடிக்கிறாராம். இப்படத்தில் சதாசிவ் என்ற கேரக்டரில் சோனு நடிக்கிறாராம். ராணி லட்சுமி பாயுடன் போர்களத்தில் சண்டையிட்டவர் தான் இந்த சதாசிவ். இப்படத்தில் தான் நடிக்க உள்ளதை சோனு சூட் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒரு நிஜ வாழ்க்கை கேரக்டரில் நடிப்பது எப்போதும் சவாலானது. ஏனெனில் ஒருவரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு, அதன்படி அதே போன்று நடிப்பில் கொண்டு வர வேண்டும். நிஜ கேரக்டரை உள்வாங்கி, தத்ரூபமாக அவர்களாக மாற வேண்டும். இப்படத்தில் சதாசிவ் கேரக்டரில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் உள்ளது என்றார்.