ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டைகர் ஷெரப், நித்தி அகர்வால், நவாசுதீன் சித்திக் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் முன்னா மைக்கேல். ஹீரோபன்டி, பாகி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக டைகரை இயக்கியுள்ளார் சபீர் கான். சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா முழுக்க சுமார் 3000 தியேட்டர்களில் வெளியானது. இது கடந்தவாரம் வெளியான ரன்பீர் கபூரின் ஜகா ஜசூஸ் படத்தை விட அதிகம். படம் வெளியான முதல்நாளில் ரூ.6.65 கோடி வசூலித்திருக்கிறது. இது டைகரின் முந்தைய படத்தை விட குறைவு தான். இருந்தாலும் படம் நல்ல வசூலை தரும் என விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.