ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"தால், ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹே" படங்களில் இணைந்து நடித்தவர்கள் ஐஸ்வர்யா ராயும், அனில் கபூரும்.... இப்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கு "பேனி கான்" என்று பெயர் வைத்துள்ளனர். அதுல் மஞ்ரேக்கர் இயக்க, கிங்கிஸ்டன் பிலிம்ஸ் மற்றும் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ரா இணைந்து தயாரிக்கிறார்கள். இசையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனில், ஐஸ்வர்யா இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளஊது. ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, அடுத்தாண்டு ஏப்ரலில் படம் ரிலீஸாக இருக்கிறது.