ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரெமோ டிசவ்சா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இப்படம் நடனத்தை மையமாகக் கொண்ட கதையாக தயாராக உள்ளதாம். இந்த படத்தில் சல்மான், தந்தை வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிப்பதற்காக டைரக்டர் ரெமோ டிசவ்சா, ஜாக்குலின் பெர்ணான்டசிடம் பேசினாராம்.
இத்தகவலை ரெமோ உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆமாம். ஜாக்குலின் பெர்ணான்டஸ் இப்படத்தில் நடிக்கிறார். இதற்காக ஏற்கனவே அவரிடம் பேசி, ஒப்பந்தமாகி விட்டது என தெரிவித்துள்ளார். பெயரிடப்படாத இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாகும் என கூறப்பட்டுள்ளது.