ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, தற்போது ஜான் ராணியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் விரைவில் படம் இயக்க போவதாக கூறியுள்ளார் கங்கனா. இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது... "விரைவில் நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அதில் நானே ஹீரோயினாகவும் நடிக்க உள்ளேன்" என்றார்.
இதனிடையே கங்கனா, தான் இயக்க உள்ள படம் தொடர்பாக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.