ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது அவரது சகோதரரான ஹர்சவர்தன் கபூரும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு மிர்சியா படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது பவேஷ் ஜோஷி என்ற படத்தில் நடிக்கிறார். இவர் திக்மான்சு துலியா இயக்கும் மிலன் டாக்கீஸ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஹர்சவர்தன் கபூர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்சவர்தன் கூறியிருப்பதாவது... "மிலன் டாக்கீஸ் படத்தில் நான் நடிக்கவில்லை. இந்தப்படத்தில் என்னை நடிக்க கேட்டனர், ஆனால் நான் நடிக்கவில்லை. இதேப்போன்று ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தியும் தவறானது. தற்போதைக்கு நான் விக்ரமாதித்யா மோத்வானியின் பவேஷ் ஜோஷி படத்தில் நடிக்கிறேன். ஏறக்குறைய படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு அடுத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.