ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒருபோதும் ஹாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார். ‛டியூப்லைட்' படத்தை தொடர்ந்து சல்மான்கான், டைகர் ஜிந்தா ஹே, தபாங்-3 படங்களில் நடிக்க உள்ளார். தபாங்-தி டூர் நிகழ்ச்சிக்காக தற்போது நியூசிலாந்தின், ஆக்லாந்தில் முகாமிட்டுள்ளார் சல்மான்கான். அவருடன் பிபாஷா பாசு, பிரபுதேவா, மனீஷ் பால், டெய்சி சா, எலி அவ்ரம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.
நியூசிலாந்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சல்மானிடம், நீங்கள் எப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறீர்கள் என்று நியூசிலாந்து மீடியாக்கள் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த சல்மான், ‛‛நிச்சயமாக நான் ஹாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன். ஹாலிவுட்டின் பாதையே வேறு, ஆகையால் நான் ஹாலிவுட்டில் நடிப்பதற்கான கேள்விக்கே இடமில்லை'' என்று கூறியுள்ளார்.
சல்மான்கான் நடிப்பில் அடுத்தப்படியாக டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.