ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
சமீபகாலமாக இந்திய நடிகைகளுக்கு ஹாலிவுட் செல்ல வேண்டும் என்று ஆசை மேலோங்கி உள்ளது. அந்த வகையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகாவும், பிரியங்காவும் ஹாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது அந்த ஆசை நடிகை வித்யாபாலனையும் தொற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேசிய வித்யாபாலனிடம் ஹாலிவுட்டில் நடிப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு பதிலளித்து வித்யாபாலன் கூறியதாவது...
ஹாலிவுட் படங்களில் நடிக்க நானும் தயாராகத்தான் உள்ளேன். ஹாலிவுட் மட்டுமல்ல உலகின் எந்த மொழி படத்திலும் நடிக்க நான் ரெடி. நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் நிச்சயம் நான் நடிப்பேன். ஆனால் இதுவரை அப்படி ஒரு வாய்ப்பும் வரவில்லை, நானும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. ஒரு நடிகைக்கு எப்போது ஒருவித உத்வேகம் தேவை. பொதுவாக எனக்கு சீக்கிரம் ஒரு விஷயத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். ஆகவே நான் என்னை எப்போதும் ஒருவித சவாலுக்கு உட்படுத்தி கொள்வேன், என்னை நானே மெருகேற்றி கொள்ள விரும்புவேன். அதனால் தான் மற்றவர்களிடமிருந்து என்னை வேறுப்படுத்தி காட்ட வித்தியாசமான படங்களில் நடிக்கிறேன் என்றார்.