இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
கடந்த ஜனவரி 16ந் தேதி குடியரசு தினத்தன்று ஷாருக்கான் நடித்த ரயீஸ் படம் வெளிவந்தது. பல விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தை வருகிற 12ந் தேதி பாகிஸ்தானில் வெளியிட திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளரான ஷாருக்கான். இதற்காக படம் பாகிஸ்தான் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படம் இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கிறது. எனவே படத்தை பாகிஸ்தானில் திரையிட தடை விதிப்பதாக அறிவித்து விட்டனர்.
தணிக்கை குழு இப்படி ஒரு காரணத்தை கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல. பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் நடித்த படத்தை சில அமைப்புகள் இந்தியாவில் திரையிட விடாமல் செய்வதால் அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாக தடையில்லை என்று கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் தற்போது ஷாருக்கான் படத்திற்கு தடை விதித்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.