ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டேவிட் தவான் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார், சாஜித் தயாரிக்கிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வருண் தவான், இப்படம் பற்றி பேசினார். அவர் பேசியதாவது... ‛‛ஜூட்வா-2 தொடர்பாக நான், என் அப்பா, சாஜித் அனைவரும் சல்மானிடம் பேசினோம். அவரைப்பற்றி எனக்கு முழுமையாக தெரியும். அவருடைய ஆசீர்வாதம் என்றும் எனக்கு உள்ளது. ஆகையால் நிச்சயம் சல்மானை ஏமாற்ற மாட்டேன், நான் மட்டுமல்ல என் அப்பா, எனது ரசிகர்கள் அனைவரும் தான்'' என்று கூறியுள்ளார்.